மதுரவாயல் தண்ணீர் நிறுவனத்திற்குள் புகுந்த 7 அடி நல்லபாம்பு!

சென்னை மதுரவாயல் பகுதியில் செயல்பட்டு வரும் தண்ணீர் நிறுவனத்திற்குள் சுமார் 7 அடி நீளமுள்ள நல்லபாம்பு புகுந்ததால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. நிறுவனத்திற்குள் பாம்பு இருப்பதை பார்த்த உரிமையாளர் அதிர்ச்சியடைந்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார்.
மதுரவாயல் வெங்கடேஸ்வரா நகர் பாரதி சாலையில் சசிகுமார் என்பவருக்கு சொந்தமான தண்ணீர் நிறுவனத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தகவல் கிடைத்ததும் மதுரவாயல் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். நிறுவனத்திற்குள் பதுங்கியிருந்த நல்லபாம்பை வெளியே கொண்டு வர முயன்றபோது, அது திடீரென தலையை உயர்த்தி படமெடுத்து சீறியது. இதனால் அங்கிருந்தவர்கள் அச்சமடைந்தனர்.
இருப்பினும், தீயணைப்பு வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் பிடிக்கப்பட்ட நல்லபாம்பை பாதுகாப்பாக எடுத்துச் சென்று வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.




கருத்துகள் (0)