தகாத உறவு விவகாரத்தில் கர்நாடகாவில் பிடிபட்ட இருவரை தாக்கிய கும்பல்!

தகாத உறவு தொடர்பான விவகாரத்தில் வீட்டைவிட்டு வெளியேறிய இருவர், கர்நாடக மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு சென்னை பல்லாவரத்திற்கு அழைத்து வரப்பட்டபோது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
பூந்தமல்லியைச் சேர்ந்த டேவிட் மற்றும் பல்லாவரத்தைச் சேர்ந்த பவானி ஆகிய இருவரும் தீபாவளி நாளில் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இதையடுத்து, பவானியின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், கர்நாடகாவில் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்லாவரத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது அங்கு வந்த கும்பல் டேவிட்டை சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் டேவிட் மற்றும் பவானி இருவரும் காயமடைந்தனர்.
காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)