இஸ்ரேலில் ஆட்சியமைப்பதில் இழுபறி நெதன்யாகுவை தவிர்க்க எதிர்க்கட்சிகள் முயற்சி!

இஸ்ரேல் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், புதிய அரசு அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளிடையே பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஆட்சியில் இருந்து தவிர்த்து, லிகுட் கட்சியுடன் இணைந்து மாற்று அரசு அமைக்க எதிர்க்கட்சித் தலைவர் ஐசன்கோட் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
ஆனால், பிரதமர் பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதில் நெதன்யாகு உறுதியாக இருப்பதால், ஆட்சியமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் சிக்கல் நீடிக்கிறது. மேலும், லிகுட் கட்சி ஆட்சியமைக்க 10 நிபந்தனைகளை முன்வைத்துள்ளதால், மற்ற கட்சிகளிடையே ஒருமித்த முடிவை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
டிசம்பர் 6-ம் தேதிக்குள் கூட்டணி அமைப்பது தொடர்பாக உடன்பாடு ஏற்படாவிட்டால், சிறுபான்மை அரசை அமைத்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஐசன்கோட் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் இஸ்ரேலில் புதிய அரசு அமைவது தொடர்பான அரசியல் நகர்வுகள் தொடர்ந்து பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளன.




கருத்துகள் (0)