தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொம்மிடி வடசந்தையூரில் சிறப்பு ஆட்டுச்சந்தை: 1,000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை!

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள வடசந்தையூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கத்திற்கு மாறாக வியாழக்கிழமை சிறப்பு ஆட்டுச்சந்தை நடைபெற்றது.
இந்தச் சந்தைக்கு மேச்சேரி, மேட்டூர், ஓமலூர், ஏற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் 1,000-க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காகக் கொண்டு வந்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகளை வாங்குவதற்கு ஏராளமான வியாபாரிகளும் பொதுமக்களும் ஆர்வத்துடன் சந்தைக்கு வந்தனர்.
சந்தையில் 10 கிலோ எடையுள்ள ஆடுகள் ரூ.10,000 முதல் ரூ.12,000 வரையிலும், ஆட்டுக்குட்டிகள் ரூ.3,500 முதல் ரூ.7,000 வரையிலும் விற்பனை செய்யப்பட்டன.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்தச் சிறப்பு ஆட்டுச்சந்தையால் விவசாயிகள் மற்றும் கால்நடை வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.




கருத்துகள் (0)