திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.4.56 கோடி உண்டியல் காணிக்கை! 83 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ஒரே நாளில் ரூ.4 கோடியே 56 லட்சமாகக் குவிந்துள்ளது.
கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மொத்தம் 83,252 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இவர்களில் 28,683 பக்தர்கள் தங்களது தலைமுடியை காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர்.
மேலும், அன்றைய தினம் மட்டும் 4.58 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்கு வந்த பக்தர்களில் 1.82 லட்சம் பேர் அன்னப்பிரசாதம் பெற்றுள்ளனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், இலவச தரிசனத்திற்குச் சென்றவர்கள் ஏழுமலையானை தரிசிக்க சுமார் 18 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தத் தகவல்களை திருப்பதி திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. ஒரே நாளில் ரூ.4.56 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்திருப்பது பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கருத்துகள் (0)