தொகுதி மறுவரையறை மூலம் மாநிலங்களின் அதிகார சமநிலை பாதிக்கும் என மனோ தங்கராஜ் குற்றச்சாட்டு!

இந்தியா என்பது பல்வேறு மாநிலங்கள் ஒன்றிணைந்த கூட்டமைப்பு என்றும், தொகுதி மறுவரையறை நடவடிக்கை மாநிலங்களுக்கு இடையிலான அதிகார சமநிலையை பாதிக்கும் என்றும் திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் உரிமைகளையும் குறைத்து, வட மாநிலங்களுக்கு கூடுதல் வலிமை அளிக்கும் வகையில் பாஜக அரசு செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த அரசியல் நகர்வுக்கு தென் மாநிலங்கள் ஒருபோதும் பலியாகிவிடக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.
மேலும், ஏற்கனவே தோற்கடிக்கப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை, குதிரை பேரம் உள்ளிட்ட முறைகளைக் கையாண்டு மீண்டும் நிறைவேற்ற பாஜக முயற்சிப்பதாகவும் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்.




கருத்துகள் (0)