ஞாயிறு, நவம்பர் 29, 2026
உண்மையின் குரல்
அரசியல்

தொகுதி மறுவரையறை விவகாரம் சோனியா காந்தி இன்று ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை!

தொகுதி மறுவரையறை விவகாரம் சோனியா காந்தி இன்று ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை!

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று (நவ.29) மாலை 4 மணிக்கு சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க உள்ளார். ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலினின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த சந்திப்பின்போது தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வரவுள்ள அரசியலமைப்புத் திருத்த மசோதாக்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு மற்றும் எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

 

மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் சென்னைக்கு வரவுள்ள சூழலில், சோனியா காந்தி - ஸ்டாலின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கிய கவனம் பெற்றுள்ளது. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் முயற்சியாக இந்த சந்திப்பு பார்க்கப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.