வாணியம்பாடி அருகே 4 வயது குழந்தையை தெருநாய் கடித்தது: பொதுமக்கள் அச்சம்..!!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 4 வயது குழந்தையை தெருநாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குழந்தையின் முகம், கை மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக மீட்கப்பட்ட குழந்தை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.




