செவ்வாய், அக்டோபர் 13, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியீடு!

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியீடு!

 

 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளின் கால அட்டவணை நாளை (அக்டோபர் 14) வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பொதுத்தேர்வு தேதிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தேர்வு அட்டவணை வெளியானதும், மாணவர்கள் தங்களது பாடங்களைத் திட்டமிட்டு படிக்கவும், தேர்வுக்கான தயாரிப்புகளை மேற்கொள்ளவும் உதவியாக இருக்கும்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.