ஆயுஷ் டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்! அக்டோபர் 29 கடைசி நாள்!

2026–2027 கல்வியாண்டிற்கான ஆயுஷ் டிப்ளமோ படிப்புகளான மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபி படிப்புகளில் சேர, சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள அரசுப் பள்ளிகளில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் படிப்புகளுக்கு 10+2 கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பமுள்ளவர்கள் [www.tnayushselection.org](https://www.tnayushselection.org) என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அக்டோபர் 29 கடைசி நாளாகும். சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பவர்கள், தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தேர்வுக்குழு அலுவலகத்தில் அக்டோபர் 29-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




கருத்துகள் (0)