மின்தேவை 30% அதிகரிப்பு: அக்டோபர் 31 வரை அவசர டெண்டர்!

மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலான நேரத்தில் அதிகரிக்கும் மின்தேவையைச் சமாளிக்கவே, அக்டோபர் 31-ம் தேதி வரை அவசர டெண்டர் கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 16,800 மெகாவாட்டாக இருந்த மின்தேவை, தற்போது 21,700 மெகாவாட்டாக உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் மின்தேவை சுமார் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
எல் நினோ தாக்கத்தால் வெப்பநிலை குறையாமல் தொடர்ந்து அதிகரித்ததே, எதிர்பாராத அளவுக்கு மின்தேவை உயர்ந்ததற்கான முக்கியக் காரணம் என்று அமைச்சர் விளக்கமளித்துள்ளார். குறிப்பாக மாலை முதல் நள்ளிரவு வரையிலான அதிக மின்பயன்பாட்டு நேரத்தில் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.




கருத்துகள் (0)