2027 ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வுப் பயிற்சி: 525 பேருக்கு வாய்ப்பு! அக்டோபர் 14 முதல் விண்ணப்பிக்கலாம்!

2027ஆம் ஆண்டுக்கான மத்திய தேர்வாணைய குடிமைப் பணிகள் முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சி ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட 2026ஆம் ஆண்டு மதிப்பீட்டுத் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் மதிப்பெண் பட்டியல், அகில இந்திய குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் மொத்தம் 525 பேருக்குப் பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
இதற்கான விண்ணப்பப் பதிவு அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 20ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகள் அக்டோபர் 28ஆம் தேதி தொடங்க உள்ளன. குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெறத் தயாராகும் மாணவர்கள், வெளியிடப்பட்டுள்ள மதிப்பெண் பட்டியல் மற்றும் விண்ணப்ப நடைமுறைகள் குறித்த விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.




கருத்துகள் (0)