செவ்வாய், அக்டோபர் 13, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

துபாய் செல்ல சில நாட்களே இருந்த நிலையில் விபத்தில் இளைஞர் பலி! நண்பருடன் உயிரிழந்த சோகம்!

துபாய் செல்ல சில நாட்களே இருந்த நிலையில் விபத்தில் இளைஞர் பலி! நண்பருடன் உயிரிழந்த சோகம்!

 

 

சிவகங்கை மாவட்டம் ஒக்கூரைச் சேர்ந்த ஆதிநாராயணன் (26) மற்றும் அவரது நண்பர் ஆதி கார்த்திக் (23) ஆகியோர் நேற்று மாலை பைக்கில் மதகுபட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார், அவர்கள் சென்ற பைக் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். விபத்தைக் கண்ட அப்பகுதி மக்கள், இருவரையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர்.

 

ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து அவர்களது குடும்பத்தினரையும் உறவினர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் உயிரிழந்த ஆதிநாராயணன் இன்னும் சில நாட்களில் வேலைக்காக துபாய் செல்லத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. வெளிநாடு செல்லத் தயாராக இருந்த இளைஞர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.