2030 காமன்வெல்த் போட்டிகள், 2036 ஒலிம்பிக்: பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு!

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் 50-வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி இன்று (அக். 11) நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, நிகழ்ச்சியில் உரையாற்றும்போது இந்தியாவின் விளையாட்டுத் துறை சார்ந்த எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பேசினார்.
அப்போது, 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான தயாரிப்புப் பணிகளில் இந்தியா ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் வெற்றிகரமாக நடத்துவதற்கான பல்வேறு முன்னெடுப்புகளும் வேகமாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.




கருத்துகள் (0)