249 ரன்கள் எடுத்தும் தோல்வி.. இந்திய பந்துவீச்சாளர்களை விமர்சித்த கவாஸ்கர்!..

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 249 ரன்கள் குவித்தும் தோல்வியடைந்தது. ராஞ்சியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 250 ரன்கள் இலக்கை வெஸ்ட் இண்டீஸ் அணி 18.3 ஓவர்களில் எட்டியது. ஷாய் ஹோப் 102 ரன்களும், ஷெர்பேன் ரூதர்போர்டு 84 ரன்களும் விளாசினர். இந்திய அணியின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், பேட்ஸ்மேன்களைக் குறை கூற முடியாது என்றும், பந்துவீச்சாளர்கள் திட்டமிட்டபடி பந்துவீசவில்லை என்றும் விமர்சித்தார்.



கருத்துகள் (0)