செவ்வாய், அக்டோபர் 13, 2026
உண்மையின் குரல்
அரசியல்

6 அதிமுக எம்எல்ஏக்கள் விவகாரம்: இன்று உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

6 அதிமுக எம்எல்ஏக்கள் விவகாரம்: இன்று உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

 

 

அதிமுகவைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (அக். 13) தீர்ப்பு வழங்க உள்ளது. சபாநாயகர் அவர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கின் முடிவு அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

 

மரகதம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயக்குமார், எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர் ஆகியோர் கட்சிக் கொறடாவின் உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாக அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து தொடரப்பட்ட வழக்கில் இன்று வெளியாகும் நீதிமன்றத் தீர்ப்பு, இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நகர்வுகளைத் தீர்மானிக்கும் என்பதால் அரசியல் கட்சிகளிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.