செவ்வாய், அக்டோபர் 13, 2026
உண்மையின் குரல்
அரசியல்

தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நியமனம்! அரசியல் வட்டாரத்தில் கவனம்!

தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நியமனம்! அரசியல் வட்டாரத்தில் கவனம்!

 

 

தமிழகத்தின் புதிய முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார். மே மாதத் தேர்தலுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் தலைமையிலான கட்சி 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த சூழலில், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை ஆதரவை உறுதிப்படுத்தும் ஆவணங்களைக் கோரி ஆர்லேகர் நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து, அப்போது எழுந்த அரசியலமைப்பு தொடர்பான சிக்கலை அவர் கையாண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இந்நிலையில், புதிய தவெக அரசுக்கும் மத்திய பாஜக அரசுக்கும் இடையிலான உறவு சுமுகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆர்லேகருக்கு முழுநேர ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி சென்னை வந்த மறுநாளே இந்த நியமனம் அறிவிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதன் பின்னணி குறித்து அரசியல் வட்டாரங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.