6 மணி நேரத்துக்கு மேல் செல்போன் பயன்படுத்தினால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் அபாயம்!

தினசரி 6 மணி நேரத்திற்கும் மேலாக செல்போன் பயன்படுத்துவது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது. நீண்ட நேரம் மொபைல் திரையைப் பார்த்துக்கொண்டிருப்பதால் கவனிக்கும் திறன் பாதிக்கப்படுவதுடன், ரத்த அழுத்தம் 16% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ச்சியாக செல்போன் பயன்படுத்துவது கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் வலியை ஏற்படுத்துவதோடு, கண்களுக்கும் அதிக சிரமத்தை உண்டாக்கும். குறிப்பாக, சுமார் 3 மணி நேர செல்போன் பயன்பாட்டிலேயே கண்களில் 70% வரை இறுக்கம் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
செல்போன் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதனால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளைத் தவிர்க்க திரை நேரத்தைக் குறைப்பது, இடையிடையே கண்களுக்கு ஓய்வு கொடுப்பது, நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்து மொபைல் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது போன்ற பழக்கங்களைப் பின்பற்றுவது அவசியமாகும்.




கருத்துகள் (0)