திங்கள், நவம்பர் 23, 2026
உண்மையின் குரல்
அரசியல்

6 தொகுதி இடைத்தேர்தல் கள நிலவரம் குறித்து தவெக ரகசிய ஆய்வு!

6 தொகுதி இடைத்தேர்தல் கள நிலவரம் குறித்து தவெக ரகசிய ஆய்வு!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் களத்தின் தற்போதைய நிலவரத்தை அறிந்து கொள்ள ரகசிய வாக்காளர் ஆய்வு நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தலில் எதிர்கொள்ள வேண்டிய அரசியல் சூழல் மற்றும் வாக்காளர்களின் மனநிலை குறித்து இந்த ஆய்வின் மூலம் கட்சி விவரங்களை சேகரித்து வருவதாக கூறப்படுகிறது.

 

குறிப்பாக, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுவான வேட்பாளரை களமிறக்கினால், அந்த கூட்டணிக்கு கிடைக்கக்கூடிய வாக்கு ஆதரவு எவ்வளவு இருக்கும் என்பது குறித்து கணக்கிடப்படுகிறது. அதேபோல், இரு கட்சிகளும் தனித்தனியாக தேர்தலை சந்திக்கும் பட்சத்தில், தற்போதைய அரசியல் சூழலில் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைக்கக்கூடிய வாக்கு சதவீதம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

 

இந்த ஆய்வின் மூலம் தொகுதி வாரியான அரசியல் பலம், வாக்காளர் ஆதரவு மற்றும் போட்டியின் தன்மை ஆகியவற்றை மதிப்பிட தவெக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வே முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு இடைத்தேர்தலுக்கான அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் மற்றும் தேர்தல் வியூகத்தை வகுக்க கட்சி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.