திங்கள், நவம்பர் 23, 2026
உண்மையின் குரல்
அரசியல்

எடப்பாடி பழனிசாமி – வேலுமணி உறவு ராமர் லட்சுமணர் போன்றது என உதயகுமார் பேச்சு!

எடப்பாடி பழனிசாமி – வேலுமணி உறவு ராமர் லட்சுமணர் போன்றது என உதயகுமார் பேச்சு!

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி இடையே எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இருவரையும் ராமர் – லட்சுமணர் போன்ற உறவைக் கொண்டவர்கள் என ஒப்பிட்டு, கட்சிக்குள் நிலவும் ஒற்றுமை குறித்தும் அவர் விளக்கமளித்துள்ளார்.

 

இரு தலைவர்களுக்கும் இடையே ஏதேனும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டாலும், அவற்றை பொதுவெளியில் பேசாமல் கட்சிக்குள் அமர்ந்து விவாதித்து தீர்வு காண வேண்டும் என உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியான விவாதங்கள் கட்சியின் உள்வட்டத்திற்குள் இருக்க வேண்டுமே தவிர, வெளியில் கொண்டு செல்லப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

மேலும், எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி இடையே உள்ள நெருக்கத்தையும் ஒற்றுமையையும் சிதைக்க சிலர் முயற்சி செய்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அத்தகைய முயற்சிகளுக்கு அதிமுகவினர் இடமளிக்காமல் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.