கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீதான புகார் விஜய் கவனத்தில் உள்ளது என அமைச்சர் தகவல்!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் முதலமைச்சர் விஜயின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (நவம்பர் 23) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அருண்ராஜிடம், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ தொடர்பான சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இந்த விவகாரம் முதலமைச்சரின் கவனத்தில் இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ குறித்து அண்மையில் நீதிபதி ஒருவர் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக தன்னால் எந்த கருத்தும் கூற முடியாது என அமைச்சர் குறிப்பிட்டார். அதேசமயம், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில் விசாரணை மேற்கொண்டு, குற்றச்சாட்டு உண்மை என தெரியவந்தால் உரிய நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.




கருத்துகள் (0)