9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊரக திறனாய்வுத் தேர்வு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்காக ஊரக திறனாய்வுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் 1991–1992ஆம் கல்வியாண்டு முதல் நடைபெற்று வரும் இத்தேர்வு, 2026–2027ஆம் கல்வியாண்டிலும் நடத்தப்பட உள்ளது. அதன்படி, இந்த ஆண்டுக்கான தேர்வு நவம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்க ஏற்கெனவே கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. மாணவர்கள் அதிக அளவில் பயன்பெறும் வகையில், விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு அக்டோபர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள மாணவர்கள் தங்கள் பள்ளி வாயிலாக இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப நடைமுறை மற்றும் தகுதி தொடர்பான கூடுதல் விவரங்களைப் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.




கருத்துகள் (0)