சென்னையில் ரூ.22.21 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்.. 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

சென்னையில் கள்ள நோட்டுகள் கடத்தல் தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீசார் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஜூலை 15ஆம் தேதி, திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதியில் போலீசார் நடத்திய சோதனையின்போது, ரூ.22.21 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளும் வெளிநாட்டுப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, மற்றொரு நபரிடமிருந்து ரூ.7,500 மதிப்பிலான கள்ள நோட்டுகளும் கைப்பற்றப்பட்டன.
மலேசியாவிலிருந்து கள்ள நோட்டுகளை இந்தியாவுக்குக் கடத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படும் இந்த வழக்கில், மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர். கள்ள நோட்டுகள் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணை அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது.




கருத்துகள் (0)