ஆசியாவில் இருந்தும் இந்தியா ஏன் ‘துணைக்கண்டம்’ என அழைக்கப்படுகிறது? இதுதான் காரணம்!

உலக வரைபடத்தில் ஆசியாவின் ஒரு பகுதியாக இந்தியா இருந்தாலும், அதன் தனித்துவமான புவியியல் அமைப்பு காரணமாக ‘துணைக்கண்டம்’ என்று அழைக்கப்படுகிறது. சுமார் 32.87 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தியாவின் வடக்குப் பகுதியில் இமயமலை இயற்கை அரணாக அமைந்துள்ளது. தெற்கே இந்தியப் பெருங்கடலும், கிழக்கே வங்கக் கடலும், மேற்கே அரபிக் கடலும் சூழ்ந்துள்ளன.
இந்த இயற்கை அமைப்புகள் இந்தியாவின் பருவநிலை, மழைப்பொழிவு, நதிகள் மற்றும் நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மொழிகள், பண்பாடுகள், உணவு முறைகள் மற்றும் வாழ்க்கை முறைகளிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. தனித்துவமான புவியியல் மற்றும் வரலாற்றுப் பின்னணியைக் கொண்டிருப்பதால், இந்தியா ஆசியாவின் ஒரு பகுதியாக இருந்தாலும் தனி புவியியல் பிராந்தியமான ‘துணைக்கண்டம்’ எனக் குறிப்பிடப்படுகிறது.




கருத்துகள் (0)