ராஜஸ்தானில் நள்ளிரவு கோர விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி!

ராஜஸ்தானின் கோட்டா–உதய்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு நிகழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த குடும்பத்தினர் காது ஷியாம் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
சம்புபுரா அருகே வந்தபோது, பழுதடைந்து சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது குடும்பத்தினர் பயணித்த வேன் எதிர்பாராதவிதமாக மோதியது. மோதலின் தாக்கம் கடுமையாக இருந்ததால், வேனில் இருந்த சிறுவர்கள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் உட்பட மேலும் 8 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)