3 ஆண்டுகளாகச் சேமித்த ரூ.10 நாணயங்கள்! ரூ.1.23 லட்சத்தில் புதிய பைக் வாங்கிய நபர்!

தெலங்கானா மாநிலம் லக்ஸெட்டிபேட்டையைச் சேர்ந்த 51 வயது நபர் ஒருவர், தனது நீண்டகால சேமிப்பைப் பயன்படுத்தி புதிய இருசக்கர வாகனம் வாங்கிய சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த ரூ.10 நாணயங்களைக் கொண்டு, ரூ.1.23 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை அவர் வாங்கியுள்ளார்.
வாகன ஷோரூமுக்குச் சென்ற அவர், முழுத் தொகையையும் ரூ.10 நாணயங்களாகவே வழங்கியதாகக் கூறப்படுகிறது. இவ்வளவு நாணயங்களை எண்ணி பணத்தைப் பெற்றுக்கொண்ட ஷோரூம் ஊழியர்கள் வியப்படைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், சிறிய தொகையாக இருந்தாலும் தொடர்ந்து சேமித்தால் பெரிய தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.




கருத்துகள் (0)