வியாழன், நவம்பர் 05, 2026
உண்மையின் குரல்
அரசியல்

அரசு விளம்பரப் படத்தில் முதலமைச்சர் விஜய் நடிக்கிறாரா? இயக்குநர் கவுதம் மேனன் இயக்குவதாகத் தகவல்!

அரசு விளம்பரப் படத்தில் முதலமைச்சர் விஜய் நடிக்கிறாரா? இயக்குநர் கவுதம் மேனன் இயக்குவதாகத் தகவல்!

தமிழக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதிய அரசு விளம்பரப் படம் ஒன்று தயாரிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விளம்பரப் படத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் நேரடியாகத் தோன்ற உள்ளதாகக் கூறப்படுவது அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.

 

மேலும், பிரபல திரைப்பட இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இந்த விளம்பரப் படத்தை இயக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக முதலமைச்சர் விஜய் இரண்டு நாட்கள் படப்பிடிப்புக்கு கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள், அவற்றின் பயன்கள் மற்றும் பொதுமக்களுக்கான சேவைகள் குறித்த தகவல்களை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த விளம்பரத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் எனத் தெரிகிறது. எனினும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.