அரசுக் கல்லூரியில் திடீரென பெயர்ந்து விழுந்த மேற்கூரை கான்கிரீட்! அச்சத்தில் மாணவர்கள்!

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே செயல்பட்டு வரும் காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் மேற்கூரையின் கான்கிரீட் பூச்சு திடீரென பெயர்ந்து கீழே விழுந்த சம்பவம் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி கட்டிடத்தின் பல்வேறு பகுதிகளிலும் கான்கிரீட் பூச்சுகள் வலுவிழந்து காணப்படுவதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அவை எப்போது வேண்டுமானாலும் பெயர்ந்து விழக்கூடிய நிலையில் இருப்பதாகவும், இதனால் வகுப்பறைகளில் அமர்ந்து படிப்பதற்கே அச்சமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கல்லூரி கட்டிடத்தை உடனடியாக ஆய்வு செய்து, சேதமடைந்த பகுதிகளைச் சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.




கருத்துகள் (0)