“அதிமுகவில் இருந்து மேலும் 15 எம்எல்ஏக்கள் விலகத் தயார்” – செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு!

அதிமுகவில் இருந்து மேலும் 15 எம்எல்ஏக்கள் விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையத் தயாராக இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அதிமுகவில் அடுத்தகட்டமாக என்ன நடக்கும் என்பதைத் தற்போது கணிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், அதிமுகவில் நேற்று கூட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாகக் குறிப்பிட்ட செங்கோட்டையன், தன்னை அக்கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியது நல்லதாகிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார். அதிமுக எம்எல்ஏக்கள் 15 பேர் தவெகவில் இணையத் தயாராக இருப்பதாக அவர் கூறியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகவல் செங்கோட்டையனின் கருத்தாக வெளியாகியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்களிடமிருந்து இதுகுறித்த உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.




கருத்துகள் (0)