BREAKING: 6 அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா செல்லும்! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அதிமுகவைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்ட உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல். ரவி ஆகியோர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதிகள் அமர்வு, சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என உறுதி செய்துள்ளது.
அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட 6 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் தொடர்பான நடவடிக்கை குறித்து அடுத்த இரண்டு மாதங்களுக்குள் சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது செல்லும் என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், தகுதி நீக்கம் தொடர்பான முடிவு அடுத்தகட்டமாக முக்கியத்துவம் பெறுகிறது.




கருத்துகள் (0)