ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவில் 14 குறைபாடுகள்? உச்சநீதிமன்ற விசாரணைப் பட்டியலில் இடம்பெறவில்லை!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணித் தலைவர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகப் பதிவாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நீதிமன்றக் கட்டணத்தில் ரூ.220 குறைவாகச் செலுத்தியது, தேவையான ஆதார ஆவணங்களை முழுமையாக இணைக்காதது உள்ளிட்ட 14 குறைபாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞரின் கையொப்பம் இல்லாததும் குறைபாடுகளில் ஒன்றாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தக் காரணங்களால் மனு அன்றைய உச்சநீதிமன்ற விசாரணைப் பட்டியலில் இடம்பெறவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மனுவில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது கவனத்தைப் பெற்றுள்ளது.




கருத்துகள் (0)