அதிமுகவில் மீண்டும் ஆலோசனை கூட்டம்? தவெகவில் இணைய திட்டமா?

இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சியில் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் இல்லத்தில் இன்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்புகளில் கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து விவாதிக்கப்படுவதாகவும், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைய உள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.




கருத்துகள் (0)