மருத்துவமனை பணியாளர்கள் கைது: தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்களை வீட்டுக்காவலில் வைத்தும், கைது செய்தும் அரசு நடவடிக்கை எடுப்பதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். தங்களது உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் போராடும் பணியாளர்களைக் குற்றவாளிகளைப் போல அரசு சித்தரிப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள டிடிவி தினகரன், மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து செயல்படுவதுதான் மக்களாட்சியின் அடிப்படை எனக் குறிப்பிட்டுள்ளார். பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காகப் போராடும் மருத்துவமனைப் பணியாளர்களின் பிரச்சினைகளை அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் தனது கருத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.




கருத்துகள் (0)