சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்!

ஹவுராவிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது, ரயில்வே பாதுகாப்புப் படையினர் பொதுப்பெட்டியில் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உரிமை கோரப்படாத ஒரு பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3.5 கிலோ கஞ்சாவை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ.1.75 லட்சம் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கஞ்சா போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ரயில் பயணத்தைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பையை ரயிலில் விட்டுச் சென்றவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து, கடத்தலில் தொடர்புடையவர்களைப் பிடிக்க ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)