ஆயுத பூஜை, தீபாவளிக்கு சிறப்புப் பேருந்துகள்: அமைச்சர் அறிவிப்பு!

பண்டிகைக் காலத்தில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, சென்னையிலிருந்து ஆயுத பூஜையை முன்னிட்டு 4 நாட்களில் 14,963 பேருந்துகளும், தீபாவளியை முன்னிட்டு 3 நாட்களில் 15,659 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். பண்டிகை நேரத்தில் பயணிகளின் போக்குவரத்துத் தேவையைச் சமாளிக்கும் வகையில் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், சோதனை முயற்சியாக மறைமலைநகரிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்குப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பாக, அந்தப் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.




கருத்துகள் (0)