செவ்வாய், அக்டோபர் 13, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று இரவு வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று இரவு வரை மழைக்கு வாய்ப்பு!

 

 

தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால், தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று இரவு 7 மணி வரை குறிப்பிட்ட பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் வானிலை நிலவரத்தை கவனித்து தேவையான முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.