குதிரை பேர சர்ச்சைக்கு மத்தியில் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களுடன் இன்று விஜய் ஆலோசனை!

தமிழக அரசியலில் குதிரை பேரம் தொடர்பான புகார்கள் மற்றும் ஆட்சி மாற்றம் குறித்த திமுகவினரின் கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் இன்று தனது கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை பாமணி இல்லத்தில் இன்று மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் பங்கேற்க உள்ளனர்.
கூட்டத்தில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடருக்கான முன்னேற்பாடுகள், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் ஆட்சிக்கு எதிராக எழுந்துள்ள விமர்சனங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குதிரை பேரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் ஆட்சி கவிழ்ப்பு குறித்த அரசியல் பேச்சுகள் தொடர்ந்து வரும் நிலையில், கூட்டணி கட்சி எம்எல்ஏக்களுடன் முதலமைச்சர் நடத்தும் இந்த ஆலோசனை அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.




கருத்துகள் (0)