செவ்வாய், நவம்பர் 03, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

BREAKING: முரசு புயல் எதிரொலி: கடலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை; மற்ற மாவட்டங்களிலும் அறிவிப்பு வருமா?

BREAKING: முரசு புயல் எதிரொலி: கடலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை; மற்ற மாவட்டங்களிலும் அறிவிப்பு வருமா?

முரசு புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மழை பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து, கடலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

 

இதற்கிடையில், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதால், அங்குள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை அந்த மாவட்டங்களுக்கான விடுமுறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் வெளியிடும் அறிவிப்புகளைப் பொறுத்தே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்பது தெரியவரும்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.