திங்கள், நவம்பர் 23, 2026
உண்மையின் குரல்
உலகம்

டிரம்பின் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு கிம் ஜாங் உன் மௌனம்!

டிரம்பின் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு கிம் ஜாங் உன் மௌனம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அமெரிக்காவின் அழைப்புகளுக்கும் தொடர்பு முயற்சிகளுக்கும் வடகொரிய தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

 

கிம் ஜாங் உன்னுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கான இறுதி முயற்சியாக டிரம்ப் கடிதம் ஒன்றை அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தக் கடிதத்தை பெற்றுக்கொண்ட வடகொரிய தூதர், அதனை திறந்து படிக்காமல் ஐநா சபை கூட்டத்தில் அப்படியே விட்டுவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. டிரம்பின் இந்த முயற்சிக்கும் வடகொரிய தரப்பில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற தகவல் தற்போது கவனம் பெற்றுள்ளது.

 

கடந்த 2019ஆம் ஆண்டு டிரம்ப் வடகொரியாவுக்கு நேரில் சென்றபோது, கிம் ஜாங் உன்னுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு தலைவர்களும் நேரில் சந்தித்துப் பேசியது சர்வதேச அளவில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்டது. அந்த சந்திப்புக்குப் பிறகு மீண்டும் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது டிரம்ப் மேற்கொள்ளும் தொடர்பு முயற்சிகளுக்கு கிம் தரப்பில் பதில் கிடைக்காதது இரு நாடுகளின் உறவில் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.