வினோத கண் அசைவால் வைரலான அரசியல் பிரமுகர் ஏலியன் சர்ச்சைக்கு விளக்கம்!

நியூயார்க் மேயர் ஸோஹ்ரான் மம்தானி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, அவருக்குப் பின்னால் நின்றிருந்த அரசியல் பிரமுகர் ஜோர்டன் ஜே.ஜி. ரைட்டின் வித்தியாசமான கண் அசைவுகள் இடம்பெற்ற வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவைப் பார்த்த பலரும் அவரது கண் அசைவுகள் குறித்து ஆச்சரியமடைந்து பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
குறிப்பாக, அவர் மனிதர்தானா அல்லது வேற்றுக்கிரகவாசியா, ஊர்வன வகையைச் சேர்ந்த உயிரினமா என நகைச்சுவையாகவும் சந்தேகத்துடனும் பலர் கேள்வி எழுப்பினர். இதனால் ஜோர்டன் ஜே.ஜி. ரைட் குறித்த ஏலியன் விவாதம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில், இந்த வைரல் சர்ச்சைக்கு பதிலளித்த ஜோர்டன், தான் வேற்றுக்கிரகவாசி கிடையாது என்றும், மற்றவர்களைப் போலவே சாதாரண மனிதர் தான் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அந்த வீடியோவில் தனது கண்கள் அவ்வாறு அசைந்தது எப்படி என்பது தனக்கே புரியவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.




கருத்துகள் (0)