திருப்பரங்குன்றம் மலை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு.. ட்ரோன்கள் பறக்க தடை!

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு, மலைப்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சிவப்பு மண்டலமாக அறிவித்து மதுரை மாநகர காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபத் திருவிழாவின்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்வதுடன், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுப்பது மற்றும் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
விழாவை முன்னிட்டு அப்பகுதியில் காவல்துறை கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு தொடர்பான கட்டுப்பாடுகளும் தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளன.




கருத்துகள் (0)