கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று (நவ.23) திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொள்வதுடன், முக்கிய ஆவணங்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சோதனையின்போது அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள், பண பரிவர்த்தனைகள் மற்றும் புகார்களுடன் தொடர்புடைய விவரங்கள் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. சோதனை முடிவில் கூடுதல் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.




கருத்துகள் (0)