செவ்வாய், நவம்பர் 24, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

ஈரோட்டில் கருணாநிதி சிலை சேதம் திமுகவினர் சாலை மறியல்!

ஈரோட்டில் கருணாநிதி சிலை சேதம் திமுகவினர் சாலை மறியல்!

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சிலை மற்றும் கட்சி அலுவலகத்தை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுகவினர் அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பி, சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். திடீரென நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், சிறிது நேரம் பரபரப்பான சூழலும் நிலவியது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.