செவ்வாய், அக்டோபர் 13, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

BREAKING: ரேஷன் கடை பணியாளர் சஸ்பெண்ட் ரத்து: தமிழகம் முழுவதும் அறிவித்த போராட்டம் வாபஸ்!

BREAKING: ரேஷன் கடை பணியாளர் சஸ்பெண்ட் ரத்து: தமிழகம் முழுவதும் அறிவித்த போராட்டம் வாபஸ்!

 

 

காஞ்சிபுரம் ரேஷன் கடையில் தரமற்ற வெங்காயம் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட விவகாரத்தில், பணியாளர் ஒருவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை போராட்டம் நடத்தப்படும் என ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

 

இந்நிலையில், சம்பந்தப்பட்ட பணியாளரின் சஸ்பெண்ட் உத்தரவை நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளது. இதையடுத்து, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட போராட்டத்தை வாபஸ் பெறுவதாகச் சங்கம் தெரிவித்துள்ளது. பணியாளரின் பணிநீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டம் தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.