சினிமா டிக்கெட் விலை உயருமா? திரையரங்கு உரிமையாளர்கள் வைத்த முக்கிய கோரிக்கைகள்!

திரையரங்குகளில் திரைப்பட டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள் புதிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதன்படி, ஒரு டிக்கெட்டுக்கான திரையரங்கு பராமரிப்புக் கட்டணத்தை (TMC) தற்போதுள்ள ரூ.6-லிருந்து ரூ.10 ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் என்ற நடைமுறையைத் தொடர வேண்டும் என்றும், திரைப்படங்களைத் திரையிட அனுமதிக்கப்பட்ட நேரத்தை காலை 9 மணி முதல் அதிகாலை 2 மணி என்பதற்குப் பதிலாக காலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.




கருத்துகள் (0)