ஞாயிறு, நவம்பர் 01, 2026
உண்மையின் குரல்
இந்தியா

சித்தராமையா குறித்து போலி பாலியல் புகார் வீடியோ தயாரித்த விவகாரம்: காங்கிரஸ் நிர்வாகி 6 ஆண்டுகள் நீக்கம்!

சித்தராமையா குறித்து போலி பாலியல் புகார் வீடியோ தயாரித்த விவகாரம்: காங்கிரஸ் நிர்வாகி 6 ஆண்டுகள் நீக்கம்!

 

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் போலியான பாலியல் புகார் வீடியோ தயாரிக்கப்பட்டதாக எழுந்த விவகாரத்தில், கர்நாடக காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர் கிருபா ஆல்வா கட்சியிலிருந்து ஆறு ஆண்டுகள் நீக்கப்பட்டுள்ளார்.

இந்த வீடியோ திட்டமிட்டு ஜோடிக்கப்பட்டது என்பதை பெங்களூரு போலீசார் உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் கட்டுப்பாடுகளை மீறிச் செயல்பட்டதாகவும், இதுதொடர்பாக விளக்கம் அளிக்கத் தவறியதாகவும் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக காங்கிரஸ் துணைத் தலைவர் எம். நாராயணசாமி, கிருபா ஆல்வாவை ஆறு ஆண்டுகளுக்குக் கட்சியிலிருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.