ஞாயிறு, நவம்பர் 01, 2026
உண்மையின் குரல்
இந்தியா

கேரளாவில் நள்ளிரவில் நிர்வாணமாக குடியிருப்புகளுக்குள் நுழையும் மர்ம நபர் – அச்சத்தில் பொதுமக்கள்!

கேரளாவில் நள்ளிரவில் நிர்வாணமாக குடியிருப்புகளுக்குள் நுழையும் மர்ம நபர் – அச்சத்தில் பொதுமக்கள்!

 

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம், அடூர் அருகே உள்ள பட்டாழிமுக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நள்ளிரவு நேரங்களில் நிர்வாணமாக நடமாடி வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அருகிலுள்ள கடையின் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில், அந்த நபர் நிர்வாணமாக வந்து குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவது தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதியில் திருட்டு முயற்சிகள் அல்லது வேறு அசம்பாவிதங்கள் நிகழக்கூடும் என பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, மர்ம நபரைக் கண்டறிந்து பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.