திங்கள், அக்டோபர் 12, 2026
உண்மையின் குரல்
அரசியல்

“எங்களுக்கு பிடித்த நிறத்தில் திருவள்ளுவர் சிலையை வைப்பதில் என்ன தவறு?” – நயினார் நாகேந்திரன்!

“எங்களுக்கு பிடித்த நிறத்தில் திருவள்ளுவர் சிலையை வைப்பதில் என்ன தவறு?” – நயினார் நாகேந்திரன்!

 

 

சென்னையில் பிரதமர் மோடியை வரவேற்கும் நிகழ்ச்சியின்போது திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை அணிவிக்கப்பட்டதும், அதைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் காவி நிற திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சியினர் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், இதுகுறித்து இன்று பதிலளித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தங்களுக்குப் பிடித்த நிறத்தில் திருவள்ளுவர் சிலையை வைப்பதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மற்றவர்களும் தங்களுக்குப் பிடித்த நிறத்தில் திருவள்ளுவர் சிலைகளை வைத்துக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து, திருவள்ளுவர் சிலையின் நிறம் தொடர்பான விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.