திருவள்ளுவருக்குக் காவி நிறம்: மீண்டும் வெடிக்கும் சர்ச்சை! கடந்த கால நிகழ்வுகளும் பின்னணியில்!

பிரதமர் மோடியை வரவேற்கும் நிகழ்ச்சியின்போதும், அதைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திலும் திருவள்ளுவர் சிலைக்குக் காவி நிறம் பயன்படுத்தப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவரின் அடையாளம் மற்றும் அவரைச் சித்தரிக்கும் விதம் தொடர்பாக அரசியல் கட்சியினர் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன.
இதேபோன்ற சர்ச்சைகள் கடந்த காலங்களிலும் ஏற்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டு பாஜகவின் சமூக வலைதளப் பதிவிலும், 2020ஆம் ஆண்டு முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதிவிலும், 2024ஆம் ஆண்டு ஆளுநர் ஆர்.என். ரவி திருவள்ளுவரைக் காவி உடையில் சித்தரித்து அஞ்சலி செலுத்தியபோதும் எதிர்ப்புகள் எழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது மீண்டும் எழுந்துள்ள இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகியுள்ளது.




கருத்துகள் (0)