சனி, நவம்பர் 21, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

ஏற்காடு மலைப்பாதையில் 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து.. இளைஞர் பலி, 4 பேர் காயம்!

ஏற்காடு மலைப்பாதையில் 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து.. இளைஞர் பலி, 4 பேர் காயம்!

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு சுமார் 300 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், காரில் பயணித்த 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

 

எடப்பாடியைச் சேர்ந்த இளைஞர் உள்ளிட்ட 5 பேர் காரில் ஏற்காட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது வாணியார் பகுதியில் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச் சுவரைத் தாண்டி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

 

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த மற்ற 4 பேரையும் மீட்புப் பணியாளர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மலைப்பாதையில் நிகழ்ந்த இந்த விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.